விபத்தில் பால் கொட்டியதால் ஆத்திரம் பழங்குடி வாலிபரை வேனில் கட்டி தரதரவென இழுத்து சென்று கொலை : மத்திய பிரதேசத்தில் கும்பல் கொடூரம்

போபால்: பழங்குடி பிரிவை சேர்ந்தவரை அடித்து, வாகனத்தின் பின்னால் கட்டி சாலையில் இழுத்து சென்று கொடூரமாக கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், பண்டா கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் கன்னையாலால் பீல். பழங்குடியினத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் தனது கிராமம் அருகே சாலையை கடக்க நின்ற இவர் மீது, அவ்வழியே பால் கேனுடன் பைக்கில் வந்த சித்தார் மால் குர்ஜார் என்பவர் மோதினார். இந்த விபத்தில், குர்ஜார் தனது பைக்கில் கொண்டு வந்த பால் கேன் கீழே விழுந்து பால் முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கன்னையாலாலை சரமாரியாக தாக்கினார். பின்னர், தனது நண்பர்களுக்கு போன் போட்டு அழைத்தார். அங்கு 7 பேர் வந்தனர். அவர்கள் எல்லாரும் சேர்ந்து, கன்னையாலாலை கடுமையாக தாக்கினர். பின்னர், அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து, அதன் பின்னால் கன்னையாலாலை கயிற்றால் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர். உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு அவர் கதறினார். கடுமையான காயத்தால் மயக்கம் அடைந்த அவரை, அந்த கும்பல் சாலையில் வீசி விட்டு சென்றது. அந்த சாலையில் சென்ற சிலர், கன்னையாலால் வேனில் கட்டி இழுத்துச் செல்லப்படும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டனர். அது வைரலாகி இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கன்னையாலால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.ஜெய் ஸ்ரீராம் கூறும்படி வாலிபருக்கு அடிமத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஷீத், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். சிக்லி என்ற கிராமத்தில் இரும்பு பொருட்களை வாங்குதற்காக நேற்று முன்தினம் இவர் மினி லாரியில் சென்றார். ஆனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை தாக்கி, கிராமத்தை விட்டு துரத்தினர். மேலும், ‘ஜெய் ராம்’ என கூறும்படி கூறி அவரை அடித்து துன்புறுத்தினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்….

Related posts

இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கிலாஃபத் நகர் பகுதியில் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் காயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா