விபத்தில் ஆசிரியர் பலி

போடி, ஏப். 6: போடி அருகே தர்மத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமர் (79). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு போடியிலிருந்து தனது டூவீலரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். மேலசொக்கநாதபுரம் பிரிவு தர்மத்துப்பட்டிக்கு அருகே சென்ற போது, திடீரென குறுக்கே நாய் வர டூவீலர் நிலைதடுமாறி விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த ராமர் மீட்கப்பட்டு தேனி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ராமர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்