‘‘விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு

பெரம்பலூர், அக்.2: பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் நேற்று (1ம்தேதி) மாலை பெரம் பலூர் வட்டாரப் போக்குவர த்துத் துறை மற்றும் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டிக ளுக்கு ஹெல்மெட் அணி வதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளிடையே வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுக்கு மரக்கன்று களையும் இனிப்புகளை யும் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் வழங்கி விழிப்புணர்வு ஏற் படுத்தினர்.

”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடை யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு, திட் டங்களை வகுத்து செயல் படுத்திவருகிறது. வாகன ஓட்டுநர்கள் தூக்கமின்மை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங் களால்சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழக அரசு இதுபோன்ற விபத்து கள் நிகழாமல் தடுக்க பல் வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் ஹெல் மெட் அணிவதன் முக்கியத் துவம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகி றது. மேலும் சாலை விதி களைப் பின்பற்றி ஹெல் மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப் படுத்திட கடந்த செப்-26 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டரால் அறிவுறுத் தப்பட்டது. அதனடிப்படை யில், பெரம்பலூர் காமரா ஜர் வளைவு அருகில், நேற்று ஹெல்மெட் அணிவதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற் றும் மரக்கன்றுகளை மாவட்டக்கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.

அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்க ளையும், புதிய ஹெல்மெட் டினையும் வழங்கி விழிப் புணர்வு ஏற்படுத்தினர். இனிவரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று ஹெல்மெட் அணியாமல் சென்றால் போக்குவரத்து விதியின்படி அபராதம் விதிக்கப்படும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவு றுத்தினார்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜா மணி, டிஎஸ்பி காமராஜ், தாசில்தார் சரவணன், போக்குவரத்துத்துறை காவல் துறையினர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை