விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி, அக்.22: தர்மபுரி டவுன் சித்தவீரப்ப செட்டி தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம், 2ம் கால பூஜை, விமானகலசம் படி வைத்தல் உள்ளிட்டவை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, காலை 6 மணியளவில் நான்காம் கால பூஜை நடந்தது. காலை 9 மணியளவில் வரசித்தி விநாயகர், பாலமுருகர், துர்கை, சனீஸ்வரர் உள்ளிட்ட நவகிரகங்கள் மற்றும் விமான கலசங்களுக்கு புனித நீர்தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி