விதை நேர்த்தி செய்து விதைப்பதால் மண் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம்-வேளாண்துறை அதிகாரிகள் தகவல்

மானாமதுரை : மானாமதுரை வட்டாரம் கலைஞர் திட்ட கிராமமான எம்.கரிசல்குளம் பஞ்சாயத்து வன்னிக்குடி கிராமத்தில் பயிற்சி மற்றும் கள ஆய்வு என இரண்டு நாள் கிராம அடிப்படை பயிற்சி நடத்தப்பட்டது.இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் கதிரேசன் தலைமை வகித்து உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தார். பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான கலைஞர் திட்டத்தில் தரிசு நில தொகுப்பு அமைத்து சாகுபடிக்கு கொண்டு வருதல் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் பற்றி எடுத்துரைத்தார்.சிவகங்கை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் வீரையா, மண் வள அட்டையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி ஆய்வின் முக்கியத்துவம், மண் ஆய்வு செய்து பயிரிடுவதால் மண் வளம் பெறுகிறது. உரச்செலவை குறைக்கலாம் எனவும், மண் வளம் பாதிப்பு அடையாமல் தடுக்கலாம் எனவும் எடுத்துரைத்தார்.விவசாயிகள் முதலில் விதைகளை தேர்வு செய்து சான்று பெற்ற விதையினை வாங்கி விதைக்க வேண்டும் விதைப்பதற்கு முன்னால் உயிர் பூஞ்சாண கொல்லியான டிரைக்கோடிடர்மா விரிடி அல்லது உயிர் உரங்களான அஸோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பதால் மண் மூலம் பரவும் பூஞ்சாண நோய்களை கட்டுபடுத்துகிறது. பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது. விவசாயிகள் ஒரு பொருளை விளைவிப்பதற்கு இடுபொருட்களுக்காக அதிக அளவில் செலவு செய்கின்றனர். எனவே உர பயன்பாட்டை குறைத்து இயற்கை இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளின் நிலத்திற்கு சென்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.இப்பயிற்சியில் 20 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான முன் ஏற்பாடுகளை மானாமதுரை வட்டார தொழில்நுட்ப மேலாளர் அமிர்தலட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாலமுருகன், சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்….

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்