விதிமீறி இயக்கப்பட்ட 944 வாகனங்களுக்கு ₹80.86 லட்சம் அபராதம்

ஆலந்தூர், ஜன.5: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஓராண்டாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், விதிமுறைகளை மீறி அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி வருவது, செல்போனில் பேசியபடியும், குடித்துவிட்டும், ஷீட் பெல்ட் அணியாமலும் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட செயல்களுக்காக, 944 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 58 வாகனங்களுக்கு 4 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாயும், பிப்ரவரி மாதம் 71 வாகனங்களுக்கு 3 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாயும், மார்ச் மாதம் 81 வாகனங்களுக்கு 4 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாயும், ஏப்ரல் மாதம் 75 வாகனங்களுக்கு 6 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாயும், மே மாதம் 79 வாகனங்களுக்கு 6 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாயும், ஜூன் மாதம் 69 வாகனங்களுக்கு 3 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாயும், ஜூலை மாதம் 95 வாகனங்களுக்கு 7 லட்சத்து 80 ஆயிரமும், ஆகஸ்ட் மாதம் 92 வாகனங்களக்கு 8 லட்சத்து 80 ஆயிரத்து 300 ரூபாயும், செப்டம்பர் மாதம் 88 வாகனங்களுக்கு 7 லட்சத்து 40 ஆயிரத்து 300 ரூபாயும், அக்டோபர் மாதம் 84 வாகனங்களுக்கு 8 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயும், நவம்பர் மாதம் 87 வாகனங்களுக்கு ₹10 லட்சத்து 78 ஆயிரத்து 100 ரூபாயும், டிசம்பர் மாதம் 64 வாகங்களுக்கு 8 லட்சத்து 90 ஆயிரம் என கடந்த ஓராண்டில் மட்டும் 944 வாகனங்களுக்கு, 80 லட்சத்து 86 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் மற்றும் ₹1 லட்சத்து 11 ஆயிரம் வாகன வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை