விதிமீறிய 10,000 பேர் மீது வழக்கு கனிமங்கள் மூலம் ரூ.983 கோடி வருவாய்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான கொள்கை விளக்க குறிப்பின் போது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: கனிமங்கள் துறையில் எடுத்த நடவடிக்கை காரணமாக 2020-21ம் நிதியாண்டில் கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் ரூ.983.07 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில், சட்ட விரோத குவாரி தடுப்பு பணிகள் மூலமாக 12,390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,680 நபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குவாரிகள் மற்றும் கனிம கடத்தல் மூலம் அரசிற்கு ஏற்படும் வருவாய் இழப்பினை தடுக்க அரசால் பல்வேறு ஆணைகள் மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்த குவாரிகளை திடீர் தணிக்கை மேற்கொள்ளவும், விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணையிக்க அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை