விடுமுறை தினங்கள் முடிந்ததால் மெரினா செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: நடைபயிற்சிக்கு செல்லலாம்; கடைகளும் திறக்கலாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் செல்ல சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. அந்த தடை உத்தரவை தொடர்ந்து முதல் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்லாத வகையில் தடுத்தனர். மேலும், பொதுமக்கள் மெரினா கடற்கரை பகுதியில் நடைபயிற்சி செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இனி, ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞயிற்று கிழமைகளில் மட்டும் தற்போது சென்னை மாநகராட்சி இந்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மற்ற வார நாட்களில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதையடுத்து திங்கள் கிழமையான நேற்று அதிகாலையிலேயே மெரினா பகுதியில் வைத்திருந்த தடுப்புகள் அனைத்தும் போலீசார் நள்ளிரவே அகற்றினர். அதைதொடர்ந்து வழக்கமாக நேற்று அதிகாலை முதல் சமூக இடைவெளியுடன் நடைபயிற்சி செய்ய பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் உற்சாகத்துடன் மெரினா கடற்கரை மணலில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.அப்போது மெரினா பகுதியில் முகக்கவசம் அணியாமல் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். அதேபோல் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக சென்ற நபர்களிடமும் அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும், ஒலி பெருக்கி மூலம் கொரோனா தொற்று குறித்தும், நம்மை நாமே காப்பாற்றி கொள்ளும் வழிமுறைகள் குறித்து போலீசார் எச்சரித்தப்படி இருந்தனர். பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் மெரினா கடற்கரை செல்ல மீண்டும் அனுமதித்தது சிறு வியாபாரிகள் முதல் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் வரை மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்