விடுதலை கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் 14 பேர் தற்கொலை முயற்சி: ஒருவர் கத்தியால் வயிற்றை கிழித்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 80 இலங்கை தமிழர்கள், 16 வங்கதேசம், 1 ரஷ்யா, 5 பல்கேரியா, சூடான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 115 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் இருந்து தங்களை உடனடியாக விடுவிக்க கோரி கடந்த 11ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், இலங்கை தமிழர் கிருபை ராஜா தலைமையில் 25 பேர் தங்களையும் விடுவிக்க கோரி நேற்றுமுன்தினம் முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று 2வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 25 பேரில், 14 பேர் தூக்க மாத்திரை தின்று மயங்கினர். இதில் இலங்கை தமிழரான உமா ரமணன் என்பவர் கத்தியால் வயிற்றை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 15 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மாவட்ட கலெக்டர் சிவராசு, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அரசு உங்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளது. இருப்பினும், அந்தந்த நாட்டு அரசின் அனுமதி கிடைத்தவுடன் தான் அங்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனினும் மீதமுள்ளவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்