விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்

 

கோத்தகிரி, ஆக.19: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டது. கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் கோத்தகிரி அருகே உள்ள காஃல்ப்லிங்ஸ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் முதியோர்களுக்கு இனிப்புகள் வழங்கி இரவு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜி, தேவகி, பிரபு, ராமு, கோபால், ராம்குமார், சுந்தர், தாஸ், மோகன், கண்ணா மற்றும் விசிக ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்