விசாரணை எந்த நிலையில் இருந்தாலும் ஆதாரம் இருந்தால் சம்பந்தப்பட்டவரை குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கலாம்

சென்னை: குற்றச்செயலில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் குற்ற வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது.  இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவரின் உறவினர்களான பூங்கனி, குரு பாண்டியன் மற்றும் தாமரைச் செல்வி ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கோரி பெண்ணின் தாய் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம் மூன்று பேரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து பூங்கனி உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.  இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு குற்றச்செயலில் தொடர்புள்ளது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் ஒரு வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 319 வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்