விசாரணை அமைப்புகளுக்கு ஆதார் விவரம் வழங்கலாமே?: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மதுரை:  புதுக்கோட்டையைச் சேர்ந்த வக்கீல் கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘‘‘என் 17 வயது மகன் சண்முகப்ரியன். பிளஸ் 2 மாணவன். 2019, செப்டம்பரில் பள்ளிக்கு சென்றவன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புதுக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகனை கோவையில் பார்த்ததாக சிலர் கூறினர். ஆனால், தேடியும் கிடைக்கவில்லை. மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் நீதிபதிகள் வீ.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், ‘‘மனுதாரர் மகனுக்கு ஆதாரில் பதிவான கை ரேகை விவரங்கள் கிடைக்கவில்லை. அதனால்தான் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. நீதிபதிகள், ‘‘ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு தான் வழங்கக்கூடாது. வழக்கு விசாரணைக்கு உதவிடும் வகையில் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே’’ என்றனர். பின்னர், ஆதார் ஆணையம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 6க்கு தள்ளிவைத்தனர்….

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்