விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரணம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 3 பேர் மீது கொலை வழக்கு: கடலூர் கோர்ட் பரபரப்பு உத்தரவு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்தவர் மும்தாஜ் (47). இவர் கடந்த 2015ல் கொலை செய்யப்பட்டார். இவரது நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் சுப்பிரமணியன் (35) என்பவரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரை  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், காவலர் சவுமியன் ஆகிய 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த 2018ல் தீர்ப்பு வழங்கியது. இதன் நகல் கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜா, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், காவலர் சவுமியன் ஆகியோர் மீது கொலை மற்றும் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யும்படி மாற்றம் செய்யலாம் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தார்….

Related posts

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!