வாளையார் வழியாக அனுமதியின்றி கேரளாவிற்கு எம்.சாண்ட் ஏற்றி சென்ற மூன்று லாரி பறிமுதல்

 

மதுக்கரை: கோவை மாவட்டம் வாளையார் சோதனை சாவடி அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலக கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி எம்.சாண்ட் எனப்படும் பாறை மணலை ஏற்றிக்கொண்டு மூன்று டிப்பர் லாரிகள் வந்தது அங்கு அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த அவர்கள் அதே இடத்தில் டிப்பர் லாரிகளை நிறுத்திட்டு அதன் ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்த கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் விஜியகுமர் இதுகுறித்து க.க.சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது