வாலிபர் சங்க அமைப்பு தினம்

 

சிவகங்கை, நவ.5: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 43வது அமைப்பு தினத்தையொட்டி சிவகங்கையில் நடந்த கொடி ஏற்று நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாதாள கருப்பு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கௌதம் கொடியேற்றினார். சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இளையான்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் இன்னாசிராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் கணேசன், ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை