வாலிபர் கடத்திச் சென்றதாக தாய் புகார் கூடங்குளம் அருகே சிறுமியை மீட்பதில் மெத்தனம்

நெல்லை, ஜன. 23: நெல்லை, கூடங்குளம் அருகே வெள்ளக்கோயில் பகுதியைச் சேர்ந்த அணுமின் நிலைய கூலி தொழிலாளியான பஞ்சவர்ணக்கிளி தனது 17 வயது மகளை காணவில்லை என கடந்த 10ம் தேதி புகார் அளித்தார். அவர் கூடங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ‘கடந்த 9ம் தேதி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினேன். ஆனால் வீட்டில் எனது மகளை காணவில்லை. அவரை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கூடங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சிறுமி மீட்கப்படவில்லை. இந்நிலையில் சிறுமி தாயார் பஞ்சவர்ணக்கிளி தனது மகளை மீட்கக்கோரி வீட்டிற்கும், காவல் நிலையத்திற்கும் அலைந்துள்ளார். ஆனால் சிறுமி மீட்கப்படாத நிலையில் பஞ்சவர்ணகிளி, ‘‘தனது மகள் மாயமாகவில்லை, ஒரு வாலிபர் கடத்திச் சென்று விட்டதாகவும், போலீசாரிடம் தெரிவித்த பின்பும் மெத்தனமாக உள்ளனர். 10 நாட்கள் ஆகியும் எனது மகளை போலீசார் மீட்கவில்லை.’’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்