வாலிபரை தாக்கி வழிப்பறி: மர்ம கும்பலுக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மும்பை, மேற்குவங்கம் உள்ளிட்ட பல வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராசல்(19), தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. பின்னர், ராசலிடம் இருந்த 2 செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்து கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதில், படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை

கொளத்தூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர்கள் 2 பேர் கைது