வாலிபரை எட்டி உதைத்த எஸ்ஐ பணியிடை நீக்கம்

வேளச்சேரி: பெரும்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐ ஜான் போஸ்கோ, போலீஸ்காரர் ஒருவருடன் நேதாஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் இருந்த கோழி இறைச்சி கடையில் வேலை செய்யும் சபீர் (18), முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதைக்கண்ட ஜான் போஸ்கோ, அவரிடம் முகக்கவசம் ஏன் அணியவில்லை என கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜான் போஸ்கோ, சபீரை ஷூ காலால் எட்டி உதைத்து, கடுமையாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து, சென்னை தெற்கு இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், பரங்கிமலை துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி, எஸ்ஐ ஜான் போஸ்கோவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி