வாலிகண்டபுரம் ஊராட்சியில் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு பொது குடிநீர் கிணற்றில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

பெரம்பலூர், ஜூலை 2: வாலிகண்டபுரம் ஊராட்சியில் பொது குடிநீர்க் கிணற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொது மக்கள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனுவை அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் ஊராட்சி, 2வது வார்டு, நடுத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த புகார் மனு வில் தெரிவித்திருப்பதாவது:
நாங்கள் வாலிகண்டபுரம் ஊராட்சியின் 2வது வார்டில் நடுத்தெரு பகுதி யில் வசித்து வருகின்றோம். எங்களது குடிநீர்த் தேவைக்காக அரசாங்கம் அமைத்துக் கொடுத்த பொது குடிநீர் கிணறு இப்பகுதியில் உள்ளது. அதன் அருகில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் எடுக்க தடையாக இருந்து, மிகவும் எங்களை சிரமப்படுத்தி வருகிறார். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் தங்கு தடையின்றி தண் ணீர் எடுக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கி றோம் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ள னர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்