வாலாஜாபாத் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பதவியேற்பு

 

காஞ்சிபுரம், ஜூலை 11: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் லயன்ஸ் சங்கத்தின் 28 வது பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் லயன் என்.டி.பாஸ்கரன் சாசன உறுப்பினர்களை பாராட்டி பேசினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் கே.அருண்குமார் சேவை திட்டங்களை வழங்கி பேசினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர் மா.அன்பு முன்னிலையில், 2023-24ம் ஆண்டின் புதிய தலைவராக லயன் ஏ.வி.சுரேஷ் குமார், செயலாளராக தனராஜன், பொருளாளராக ஸ்ரீராமன் ஆகியோர் பதவியேற்றனர். மேலும் இவ்விழாவில், 5 மாணவிகளுக்கு கல்வி நிதியாக ரூ.45 ஆயிரம் வழங்கப்பட்டது. 25 ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியும், காய்கறிகளும் வழங்கப்பட்டது. 10 சுகாதாரப் பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை