வாலாஜாபாத் பேரூராட்சியில் சொத்து விவரத்தை மறைத்த அதிமுக வேட்பாளர்: கலெக்டரிடம் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையாட்டி, வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், தனது சொத்து விவரங்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக, அப்பகுதி வாக்காளர்கள் கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்த்தியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. வாலாஜாபாத் பேரூராட்சி 2 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், தாக்கல் செய்துள்ள வேட்புமனு படிவம் 3ஏ, 3வது பக்கத்தில் வேட்பாளர் மற்றும் அவரை சார்ந்தவர்களின் அசையா சொத்து விவரங்களில் வேட்பாளர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகளுக்கு எந்த சொத்தும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவறான தகவலாகும். அதிமுக வேட்பாளருக்கு வாலாஜாபாத் மெக்ளின்புரத்தில் 1678 சதுரடியில் சொந்தமாக வீடு உள்ளது. அவரது மனைவி பெயரிலும் அதே பகுதியில் 1360 சதுர அடி மனையில் வீடு உள்ளது. ஆனால் அவர், தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் அசையா சொத்து எதுவும் இல்லை என தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி பொய்யான ஆவணங்களை அளித்து 2வது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி