வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை அமைக்க ஒப்புதல்: பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில், பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில்  நேற்று நடந்தது. துணை தலைவர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், வாலாஜாபாத்தில் உள்ள 15 வார்டுகளிலும் சுகாதார பணிகள் மிகவும் தோய்வடைந்துள்ளன. இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வார்டு என பாரபட்சமின்றி முழு துப்புரவு பணியை வாரம் ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, வாலாஜாபாத்தில் என்னென்ன வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது என கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாலாஜாபாத்தில் உழவர் சந்தை துவங்க பஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு உழவர் சந்தை அமைக்க ஒப்புதல் அளிப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்