வாலாஜாபாத் அருகே குறுகிய வளைவில் கூடுதல் தானியங்கி சிக்னல்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே ராஜகுளம் செல்லும் புறவழிச் சாலையின் குறுகிய வளைவில் கூடுதலாக தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் அருகே முத்தியால்பேட்டையில் இருந்து ராஜகுளம் வரை செல்லும் புறவழி சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பல்வேறு பணி காரணமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த புறவழி சாலையில் மிகவும் குறுகலாக ஏராளமான வளைவுகள் உள்ளன. மேலும் இந்த புறவழி சாலை வழியே சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் குறுகிய வளைவுகள் தெரியாமல் ஏராளமான வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து ராஜகுளம் வரை செல்லும் புறவழி சாலையின் குறுகிய வளைவுகளில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதனால் கலியனூர், வையாவூர் பகுதி சாலை வளைவில் கடந்த சில நாட்களுக்கு முன் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் மட்டும் வாகன விபத்துகள் குறைந்துள்ளன. இதேபோல், மற்ற கிராமங்களை ஒட்டியுள்ள புறவழி சாலையின் குறுகிய சாலை வளைவுகளில் கூடுதல் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்….

Related posts

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து

புகார் அளித்த சேலம் பெரியார் பல்கலை. ஊழியர்களுக்கு மிரட்டல்?