வாலாங்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணி தீவிரம்

கோவை: கோவை வாலாங்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. குளத்தின் குறுக்கே உள்ள சாலைப்பகுதி ரூ.24.31 கோடி மதிப்பிலும், கரைப்பகுதி ரூ.67.86 கோடி மதிப்பிலும் புனரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுவர்களுக்கான விளையாட்டு மையம், சைக்கிள் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி, நடைபயிற்சி தளம், மிதவை பாலம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து அங்கு கரைப்பகுதியில் உணவகங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலா மேம்பாட்டு துறையின் சார்பில் வாலாங்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது படகு சவாரிக்கான பயணச்சீட்டு பெறும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வாலாங்குளத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்….

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!