வார விடுமுறையையொட்டி கும்பக்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரியகுளம், ஏப். 17: வார விடுமுறையையொட்டி, பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பெய்யவில்ைல.

இப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், வார விடுமுறையையொட்டி நேற்று கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஆனால், அருவியில் நீர்வரத்து குறைந்திருந்ததால், சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து செல்கின்றனர். மேலும், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இன்னும் சில நாட்களில் அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாது போகும் சூழ்நிலை ஏற்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை