வாய்க்காலில் தவறி விழுந்து பெண் பலி

ஈரோடு, செப். 1: மொடக்குறிச்சி அடுத்துள்ள மேல்காதகிணறு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (46). இவர் கணவரை பிரிந்து கடந்த 19 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். அப்போது நிலைதடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பட்டாசுபாளி என்ற இடத்தில் வாய்க்காலில் புஷ்பாவின் சடலம் கரை ஒதுங்கி கிடந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியின் 49வது வார்டு கவுன்சிலர் கோகிலவாணி மணிராசு, மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டலத்தில் 49-வது வார்டில் உள்ள கலைஞர் கருணாநிதி நகரையொட்டி (கே.கே.நகர்) அமைந்துள்ளது முத்தம்பாளையம் பகுதி 7. எனவே, இந்த பகுதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில், அதாவது தளபதி மு.க.ஸ்டாலின் நகர் என பெயர் சூட்ட பரிந்துரை செய்ய வேண்டும்’’ என கோரியுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை