வானவில், இலக்கிய மன்றங்களில் சிறந்து விளங்கிய 6 மாணவர்கள் வெளிநாடு செல்ல தேர்வு

தேனி, ஏப். 13: தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல்வாசிப்பு,நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களை உலக அளவிலும், தேசிய மற்றும் மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நடப்பு கல்வியாண்டிற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் சிறார் திரைப்படம் பிரிவில் தேக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சஹானா, விளையாட்டு பிரிவில் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வைரபாரதி, விளையாட்டு பிரிவில் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் திபேஸ், வானவில் மன்றத்தின் மூலம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்ய, வானவில் மன்றத்தின் மூலம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன்குமார், வினாடிவினா மன்றத்தின் மூலம் வடுகப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 மாணவ, மாணவியர்களையும் வெளிநாடு அழைத்துச் செல்ல பெற்றோர் ஒப்புதழ் பெறப்பட்டு, அவர்கள் வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல பாஸ்போர்ட் எடுக்க தேவையான நடவடிக்கைகளை தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் செய்துள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்