வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய அரசு புதிய வசதி

புதுடெல்லி, ஆக. 9: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’ இணையதளத்தின் மூலம் இது அளிக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோவின் இணையதளத்தில் இருந்து உடனடியாக இதை டவுன்லோடு செய்வதும் பல நேரங்களில் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில், இந்த சான்றிதழை எளிதாக பெறுவதற்கான வாட்ஸ் அப் வசதியை ஒன்றிய சுகாதார அமைச்சகம் செய்துள்ளது. இது குறித்து இத்துறையின் அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சமான்ய மனிதனின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் புரட்சி. கொரோனா தடுப்பூசி சான்றிதழை இப்போது வாட்ஸ் அப்பில் 3 எளிய நடைமுறையில்  பெறலாம். 90131 51515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்யுங்கள். ‘covid certificate’ என்று வாட்ஸ் அப்பில் டைப் செய்யுங்கள். உங்களுக்கு வரும் ஓடிபி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் சான்றிதழை நொடியில் பெறுங்கள்,’ என்று கூறியுள்ளார்….

Related posts

கார் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பு

போக்ஸ்வேகன் ஓணம் எடிஷன்

கடந்த ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை10 சதவீதம் அதிகரிப்பு