வாடிப்பட்டி பகுதியில் வெளுத்து வாங்கிய கன மழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர்

 

வாடிப்பட்டி, ஆக. 20: வாடிப்பட்டி பகுதியில், நேற்று சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யத்தொடங்கியது, சுமார் 2 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழைக்கு வாடிப்பட்டியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. குறிப்பாக வாடிப்பட்டி தாதம்பட்டியில் உள்ள ஒட்டான்குளம் நிரம்பியது, அதேபோன்று நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலை மற்றும் பொட்டுலுப்பட்டி செல்லும் பகுதியையும் மழைநீர் சூழ்ந்து கொண்டது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்