வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க ஜியோ கூடுதல் அலைக்கற்றை வசதி

மும்பை: இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை ஏல செயல் நடவடிக்கையின்போது, இந்தியாவிலுள்ள அனைத்து 22 சர்க்கிள்களிலும் அலைக்கற்றையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை பெற்றிருப்பதாக கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அறிவித்திருந்தது. இந்நிறுவனம் 850 MHZ, 1800MHZ மற்றும் 2300 MHZ பேண்டுகளில் இந்த அலைக்கற்றைகளைப் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் கூடுதலாக, 850 MHz பேண்டில் 5 MH; 1800MHz பேண்டில் 5MHz பேண்டில் 10 MHz அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ்நாடு முழுவதிலும் அமைந்துள்ள 22 ஆயிரம் தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அலைக்கற்றைகளிலும் கூடுதலாக பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளின் பயன்பாட்டு நடவடிக்கையை ஜியோ தொடங்கியிருக்கிறது. இதன் மூலம்,  850 MHz, 1800 MHz மற்றும் 2300 MHz-களில் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய மொத்த அலைக்கற்றை அகலம் 50 சதவிகிதமளவிற்கு முன்னேற்றம் பெறும். மிகப்பெரிய அளவிலான இந்த அலைக்கற்றை அதிகரிப்பு தமிழக ஜியோ சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு வலையமைப்பு அனுபவத்தை மேலும் மேம்படுத்த உதவும். மேலும், வீட்டில் இருந்தே பணியாற்றும் ஊழியர்கள், ஆன்லைனில் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவும், வீட்டில் இருந்தே தொழில்களில் ஈடுபடுவோருக்கும் இது உதவியாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை