வாடிக்கையாளரின் நிரந்தர வைப்பு தொகையில் ரூ.1.23 கோடி கையாடல் செய்த வங்கி மேலாளர், கணவர் கைது

சென்னை: சென்னை, பஞ்சாப் -சிந்த் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும் அண்ணா சாலை கிளையின் மேனேஜராக கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அண்ணா நகரை சேர்ந்த நிர்மலா ராணி பணிபுரிந்தார். இவர், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை தன்னிச்சையாக முடித்து, அந்த தொகைகளை தன்னுடைய பெயரிலான மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றி ரூ.1.23 கோடி கையாடல் செய்துள்ளார். இதுபற்றி, பஞ்சாப்- சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, வங்கி மோசடி வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர்.விசாரணையில், வங்கியில் தொழிற்கடன் மற்றும் கடன் பெறும் நிறுவனத்தினர்கள் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்பு தொகையை வைத்திருப்பர். அந்த வகையில், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கிலிருந்து ரூ.1.23 கோடி கையாடல் செய்து  தனது வங்கி கணக்கிற்கு மாற்றி அதிலிருந்து தனது கணவர் இளங்கோவன் பெயரில் உள்ள வங்கி கணக்கில் மாற்றம் செய்து பணத்தை ஏடிஎம்களில் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மேனேஜர் நிர்மலாரானி (59) மற்றும் அவரது கணவர் இளங்கோவன் (62) ஆகியோரை கைது செய்தனர். மேலும் நிர்மலா ராணி, ஏற்கனவே பஞ்சாப் சிந்த் வங்கியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு