வாடகைக்கு குடியிருப்பவர் பற்றி தகவல் அளிக்க வேண்டும்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜமுரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பரமத்திவேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு சொந்தமான வீடுகளில், புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களை பற்றிய முழு விபரம் தெரிந்தும், அவர்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று, முகவரிகளை சரி பார்த்து குடியமர்த்த வேண்டும். வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து, ஒப்புதல் அளித்த பிறகே, அவர்களை வாடகைக்கு குடி அமர்த்த வேண்டும்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்