வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டு வாங்குங்க பழநியில் பீட் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு

 

பழநி, அக். 5: பழநியில் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அந்த நோட்டீசில் தெரிவித்திருப்பதாவது: வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் பில் கேட்டு வாங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ, அக்மார்க், ஹால்மார்க் முத்திரை பெற்ற பொருட்களையே வாங்க வேண்டும். எடை அளவு சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து மாத்திரை, மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும். நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள், வியாபார நிறுவனங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். ரேசன் கடை விநியோகத்தில் உள்ள குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், இணை பதிவாளர் கூட்டுறவு துறை, வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை