வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் விவசாயிகள் சங்கத்தினர் துண்டு அணிந்து வந்ததால் பரபரப்பு

 

தஞ்சாவூர், ஜூன் 5: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் துண்டு அணிந்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் துண்டு அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக செந்தில்குமாரின் முகவர்களாக விவசாயிகள் சங்கத்தினர் கழுத்தில் பச்சை நிற துண்டு அணிந்து வந்தனர்.

இவர்களுக்கு துண்டு அணிந்து வர மைய நுழைவாயிலில் போலீசார். அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் சலசலப்பானதைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கத்தினர் மட்டும் துண்டு அணிந்து கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் செல்போனுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்தார். அவரிடம் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேட்பாளர் ஹூமாயூன் கபீர் வெளியில் போலீசாரிடம் செல்போனை கொடுத்து டோக்கன் வாங்கிச் சென்றார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை