வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பூந்தமல்லி: மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டன. தற்போது தேர்தல் நடைபெறும் அந்தந்த பகுதிகளுக்கு தனித்தனியாக வாகனங்களில் ஆயிரத்து இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது. குறிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறும் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது….

Related posts

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடி தீவிரம்