வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற அதிமுகவினரை போலீசார் விரட்டியடிப்பு

காலாப்பட்டு:  விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், அதிமுக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்குள்   அத்துமீறி நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றவர்களை போலீசார்  விரட்டியடித்தனர்.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு பெரியமுதலியார்சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணி முதல் 6 வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.  போலீசாருடன் அதிமுகவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அதிமுகவினர் விரட்டியடிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளில் ஒரே நாளில் 5195 மேல்நீர்தேக்க தொட்டிகள் ஒட்டு மொத்த தூய்மை பணி

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்டத்தில் 5.43 லட்சம் பேர் பயன்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்