வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி

 

ஈரோடு, ஆக.2: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வகையில் கடந்த 21ம் தேதி முதல் இம்மாதம் 21ம் தேதி வரை வாக்காளர்கள் புதியதாக சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் 17 வயது நிரம்பிய வாக்காளர்களை முன்பதிவு செய்து தகுதியின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 19 லட்சத்து 43 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளன. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 2222 வாக்குசாடி நிலை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளர்கள் பிஎல்ஓ செயலி மூலம் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர். களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்