வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்

திருத்தணி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நாளை நடக்க இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் உத்திரவிட்டுள்ளர். இத்திட்டம் 1.08.2022 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆதார் எண் விபரங்களை படிவம்-6பி வாக்காளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, மக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்புமுகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6சி மூலம் இணைத்துக்கொள்ளலாம். மேலும் , ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்கள் படிவம்-6 பியில் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். எனவே, அனைவரும் மேற்படி சிறப்பு முகாமன்று தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடி அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை மையத்தினை அணுகி வாக்காளர் இணைக்க ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  கேட்டுக்கொண்டார்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்