வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கினால் நடவடிக்கை: வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

வேலுார்: இன்று வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி நாளாகும். இன்று மாலையே இறுதி பட்டியல் வெளியாக உள்ளது. இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் முடிந்த உடனே வேட்பாளர்கள் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில், ஒரே வீதியில் பிரசாரம் செய்யும்போது, வாக்குவாதம், எதிர்கோஷ்டி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் அரசியல் கட்சியினர் தங்களது நோட்டீஸ் தர முடியாமல் இடையூறு ஏற்படுத்துவதாக தேர்தல் பிரிவினருக்கு புகார் வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அனுமதி பெற்ற பகுதிகளுக்கு மட்டும் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்கு கேட்டு செல்பவர்கள், வாக்காளர்களை சந்திப்பது, பேசுவது போன்றவற்றில் விதிமுறை மீறல் கூடாது. குறிப்பிட்ட கட்சியினருக்கு வாக்கு அளிக்கக்கூடாது என வற்புறுத்தக்கூடாது. சத்தியம் வாங்குவது, உறுதிமொழி வாங்குவது, பல்வேறு நிகழ்வுகளை காட்டி கட்டாயப்படுத்துதல் கூடாது. வாக்காளர்களுக்கு பணம், பொருள் உதவி செய்வதாக கூறி வாக்குகளை பெற முயன்றால் தேர்தல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு சேகரிப்பின்போது வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது. வாக்கு கேட்டு செல்பவர்கள் பணம், பொருட்கள் வழங்கினால் அதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுப்பது உள்பட வாக்கு சேகரிப்பில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் விதிகளின்படி வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றனர்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு