வாகன ஓட்டிகள் கடும் அவதி புலிகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி

மேட்டுப்பாளையம், ஜூலை 30: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கல்லார் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் உண்டு, உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக வனவிலங்குகள் குறிப்பாக புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனச்சரக வனவர் முனியாண்டி உள்ளிட்ட வனத்துறையினர், உண்டு, உறைவிடப்பள்ளி நிர்வாகி ஷ்யாம், மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்