வழிப்பறி, கொள்ளை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவானவர் துப்பாக்கி முனையில் கைது

மாமல்லபுரம்: உத்தரபிரதேசம் மாநிலம் கண்டோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (எ) ராஜேஷ் (40). இவர் மீது திருவள்ளூர் மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் காவல் நிலையங்களில் கடந்த 2008ம் ஆண்டு வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்தது. இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து ராஜேஷை, பிடிக்க 2008ம் ஆண்டு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகளாக அவரை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜேஷ் செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் சுற்றி திரிவதாக மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று செங்கல்பட்டு பஸ் நிலையம் சென்று, அங்கு சுற்றித் திரிந்த ராஜேஷை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது….

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!