வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பெண்ணை படுக்கைக்கு அழைத்த இன்ஸ். மீது வழக்கு

பில்வாரா: ராஜஸ்தானில் பெண்ணை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக, அவரை படுக்கைக்கு அழைத்த இஸ்பெக்டர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திர சிங் என்பவர், குடும்ப விவகாரம் தொடர்பான புகார் ஒன்றை விசாரித்து வந்தார். இவ்விகாரத்தில் கணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக, அந்த பெண்ணின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் சென்றார். அங்கிருந்த அந்த பெண்ணிடம், ‘வழக்கில் இருந்து விடுக்க வேண்டுமானால், என்னுடன் படுக்க (பாலியல் உறவு) வேண்டும்’ என்று வற்புறுத்தி உள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், வீட்டைவிட்டு வெளியேறி சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதையடுத்து சுபாஷ் நகர் பெண் போலீஸ் புஷ்பா கசோடியா, இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தினார் அதில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் உண்மையானது என்று தெரியவந்ததால், இன்ஸ்பெக்டர் மகேந்திர சிங் மீது பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு