வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப். 11: திண்டுக்கல் நீதிமன்ற நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இ- பைலிங் முறையை பின்பற்றுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே இதனை ரத்து செய்து ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிரவாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘இ- பைலிங் முறை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் ஏப்.19ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) கருப்பு துணி அணிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அதன் பிறகும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத் கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை