வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் நிதியுதவி பெற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல், அக். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதியுதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட திட்டங்களுக்காக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்திட்டங்களை செயல்படுத்திட நிதியுதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் அரசுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தை www.awbi.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க நிதி உதவி, காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக SPCAs//AWOs/NGOs-க்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்வதற்கு நிதி உதவி வழங்குதல்,

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்னும் திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதி உதவி வழங்குதல், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ஆதரவற்ற தெரு நாய்கள், விலங்குகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை