வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னை உள்பட வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பிருக்கின்றது. நாளை நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கின்றது. ஆகஸ்ட் 12ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 13ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்