வளர்ப்பு நாய் குரைத்ததால் தகராறு டாட்டூ கலைஞர் குத்தி படுகொலை

சென்னை: காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரின், மகன் சரண்சிங் (25). காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டூ கடையும், வணிகர் வீதியில் அசைவ உணவகமும் நடத்தி வந்தார். இவரது, வீட்டுக்கு அருகே வசித்து வரும் விஷ்ணு குடும்பத்துக்கும் சரண்சிங் குடும்பத்துக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி பிரச்னையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 குடும்பத்துக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. விஷ்ணு தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன், இவரது மனைவி அமுதா ஆகியோரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து  கடையில் இருந்து சரண்சிங் உடனடியாக தனது வீட்டுக்குவந்து விஷ்ணுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த விஷ்ணு, அவரது தாய் சித்ரா, தம்பி சிவா மற்றும் உறவினர்கள் 3 பேர் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் கத்தரிக்கோல், ஸ்குரு டிரைவர் போன்றவற்றை எடுத்துவந்து சரண்சிங், அவரது குடும்பத்தினர் மீது சரமாரியாக குத்தினர். படுகாயம் அடைந்த சரண்சிங் உள்பட அனைவரையும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரண்சிங் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார் விசாரித்தனர். இதில், விஷ்ணு கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்றும், முன்பகை காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து சரண்சிங்கை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டில் வளர்க்கப்படும் நாய் சரண்சிங் வீட்டின் அருகே நின்று குரைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்சிங், வளர்ப்பு நாயை வேறிடத்தில் கட்டி வைக்க வேண்டியதுதானே ஏன் எங்களுக்கு இடைஞ்சல் செய்கிறீர்கள்’ என்று விஷ்ணுவிடம் கேட்டுள்ளார். இதுவும் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.கொலைக்கு காரணமான விஷ்ணு, அவரது தாய் சித்ரா, தம்பி சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது