வலையபட்டி சிதம்பரம் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு பட்டமளிப்பு விழா

பொன்னமராவதி, மார்ச் 31: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி சிதம்பரம் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு (மழலையர்களுக்கு) பட்ட மளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி அறங்காவலர் வள்ளிமயில் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் செந்தில் வரவேற்றார். முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன் பள்ளி சிறுவர்களுக்கு பட்டங்கள் வழங்கியும், விழாவில் திருக்குறள் மற்றும் தனித்திறமைகள்வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு செய்தும் சிறப்புரையாற்றி பேசியதாவது: மாணவர்களும் ஆசிரியர்களுக்குமான உறவு புனிதமானஉறவு, பெற்றோர்களை விட ஆசிரியர்கள் தான் குழந்தைகள் அதிகம் நேசிக்கின்றனர்.

இன்றைய பட்டம் பெறும் சிறுவர்கள் வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியராக, காவல்துறை கண்காணிப்பாளராக. உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வரவேண்டும்.வளர்ச்சியான தமிழ்நாடு வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக மாணவர்கள் நல்ல முறையில் படித்து சாதனை படைக்கவேண்டும் என்று பேசினார்.தொடர்ந்து மாணவ,மாணவிகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி