வலங்கைமான் பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணி: திருவாரூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

வலங்கைமான், ஆக. 17: வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு  நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன .பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு  நேற்று வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கஞ்சேரி வடக்கு தெரு மற்றும் தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் ரூ.35 லட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் வலங்கைமான் பேரூராட்சி லாயம் வார்டுக்கு உட்பட்ட கோல்டன் சிட்டி பகுதியில் அம்ரூட் 2.0 – திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்

பூங்கா மேம்பாடு செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 மாணவர்கள் அமரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் வாங்கப்பட்ட ஸ்டீல் இருக்கைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து அனைவருக்கும் வீடு ஆகிய திட்டப்பணிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, பேரூராட்சி தலைவர் சர்மிளா, திமுக நகர செயலாளர் சிவனேசன், துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்