வலங்கைமான் அமராவதி வெட்டாறு பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைப்பு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த அமராவதி பகுதியில் உள்ள வெட்டாறு பாலத்தின் பக்கவாட்டு தடுப்புசுவர் உடைந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.கும்பகோணம் மன்னார்குடி சாலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அமராவதி பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் வெட்டாறு பாலத்தின் தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாரி மோதியதில் இடிந்து விழுந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக பாலத்தின் பக்கவாட்டு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே பயணிக்கின்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்து நிற்கும் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரினை உடனடியாக அமைத்து தர அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெட்டாறு பாலத்தின் உடைந்த பக்கவாட்டு சுவரை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரனில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது பாலத்தின் பக்கவாட்டு சுவர் உடைந்த பகுதியில் புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது….

Related posts

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி