வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.103.50 குறைப்பு

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.103.50 குறைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் (டிசம்பர்) வீட்டு உபயோக காஸ் சிலிணடர் சென்னையில் ரூ.915.50 ஆகவும், சேலத்தில் ரூ.933.50 ஆகவும் விற்கப்பட்டது. நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.103.50 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,234.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.103.50 குறைந்து, ரூ.2,131 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. வரும் மாதத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி